Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வாணியம்பாடியில் கஞ்சா விற்பனை: கைதாகி இருவர் சிறையிலடைப்பு 

அக்டோபர் 11, 2020 06:28

வாணியம்பாடி: வாணியம்பாடியில் கஞ்சா விற்ற பிரபல சாராய வியாபாரி மற்றும் அவரது சகோதரி உட்பட இருவரை கைது செய்து 2.5 கிலோ கஞ்சாவை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நேதாஜிநகர் பகுதியில் கல்லூரி மாணவர்கள் மற்றும் கூலி தொழிலாளிகளுக்கு சட்ட விரோதமாக ஒரு பாக்கெட் ரூ.300 வீதம் கஞ்சா விற்று வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் வாணியம்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் பழனி செல்வம் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது வீட்டில் பதுக்கி  வைத்து கஞ்சா  விற்று கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த ராணி(54) மற்றும் பொம்மிகுப்பம் பகுதியை சேர்ந்த விஜயகுமார் (36) ஆகிய இருவரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த 2 .5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து வாணியம்பாடி கிராமிய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொன்டு திருப்புத்தூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும்  கைது செய்யப்பட்டுள்ள ராணி என்பவர் எற்கனவே குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள பிரபல சாராய வியாபாரி மகேஷ்வரியின் சகோதரி என விசாரணையில் தெரிய வந்துள்ளது.
 

தலைப்புச்செய்திகள்