Saturday, 29th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

முடிதிருத்தும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

அக்டோபர் 11, 2020 06:56

சென்னை: ஆலந்தூர் ஆசர்கானா மைதானத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்கள் சலூன் கடைகளை அடைத்து கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தினர். தமிழ்நாடு மருத்துவர் சமூக நல சங்கம் முடிதிருத்தும் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் குரும்பம்பட்டி கிராமத்தில் மருத்துவர் சமூகத்தை சேர்ந்த சிறுமி 12 வயது கலைவாணி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு மின்சாரம் பாய்ச்சி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

இதை கண்டித்து தமிழக அரசு இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய வலியுறுத்தியும், தாமதமாகும் பட்சத்தில் சி.பி.ஐ. விசாரணை நடத்தக் கோரியும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க கோரியும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் கடைகளை அடைத்து கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்சென்னை தெற்கு மாவட்டத்தின் சார்பில் நடைபெற்ற கவன ஈர்ப்பு போராட்டத்தில் மாவட்ட தலைவர் சேகர் முன்னிலையில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
சுமார் 200க்கும் மேற்பட்ட முடிதிருத்தும் தொழிலாளர்கள் மற்றும் மகளிர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


 

தலைப்புச்செய்திகள்