Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பிகாரில் ராஷ்டிரிய ஜனதாதளம் மற்றும் காங்கிரஸ் கட்சி கூட்டனி அமைத்து போட்டியிடுகிறது

மார்ச் 23, 2019 06:43

பாட்னா: பீகார் மாநிலத்தில் ஆர்.ஜே.டி., காங்கிரஸ் இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டது.நாடு முழுவதும் விரைவில் பார்லி தேர்தல் நடைபெற உள்ளது.ஐக்கிய முற்போக்கு கூட்டணியும் தேசிய ஜனநாயக கூட்டணியும் மாநில வாரியாக கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.பீகார் மாநிலத்தில் மொத்தம் 40 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இதில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ஜ., நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் தற்போது ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் தொகுதி உடன்பாடு ஏற்பட்டது. 

இது குறித்து ஆர்.ஜே.டியின் செய்தி தொடர்பாளர் மனோஜ் குமார்ஜா கூறியதாவது:இதன்படி லாலுகட்சியான ராஷ்டிரிய ஜனதாதளம் 20 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 9 தொகுதிகளிலும் முன்னாள் முதல்வரான ராம் மன்ஜியின் இந்துஸ்தான் அவாம் கட்சி மூன்று இடங்களிலும் உபேந்திரா குஷ்வாகா தலைமையிலான ராஷ்டிரிய லோக் சமதா கட்சி 5 இடங்களிலும், முகேஷ் ஷாகினியின் விகாஷில் இன்ஷான் கட்சி 3 இடங்களிலும் , சி.பி.ஐ.(எம்.எல்) போட்டியிடுகிறது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். அவாம் கட்சி தலைவர் ராம் மன்ஜி கயா தொகுதியிலும் போட்டியிடுகிறார்.

தலைப்புச்செய்திகள்