Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்னை சென்ட்ரல் - கோவை ரயில் புறப்படும் நேரம் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு 

அக்டோபர் 11, 2020 10:26

சென்னை: பராமரிப்பு பணி காரணமாக இன்று மற்றும் வருகிற 14ம் தேதியில் சென்னை சென்ட்ரல்- கோவை சிறப்பு ரெயில் புறப்படும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

பராமரிப்பு பணி காரணமாக இன்று திங்கட்கிழமை) மற்றும் வருகிற 14ம் தேதியில் கீழ்க்கண்ட சிறப்பு ரெயில் புறப்படும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

* சென்னை எம்.ஜி.ஆர் சென்ட்ரல்-கோவை (வண்டி எண்: 02679) இடையே இயக்கப்பட்டு வரும் அதிவிரைவு சிறப்பு ரெயில் இன்று மற்றும் 14ம்தேதி மதியம் 2.30 மணிக்கு பதிலாக, மாலை 4 மணிக்கு சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.

* மறுமார்க்கமாக கோவை-சென்னை எம்.ஜி.ஆர். சென்ட்ரல் (02676) இடையே இயக்கப்பட்டு வரும் அதிவிரைவு சிறப்பு ரெயில் இன்று மற்றும் 14ம்தேதி மதியம் 3.15 மணிக்கு பதிலாக மதியம் 3.35 மணிக்கு கோவை ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 

தலைப்புச்செய்திகள்