Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மருதம் இலவச பயிற்சி மையத்தில் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி

அக்டோபர் 12, 2020 11:47

தென்காசி: தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகா மங்களபுரம் கிராமத்தில் உள்ள கிங் ஆப் கிங்ஸ் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் ஏழை-எளிய தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவிகளை அரசு வேலைகளுக்கு அனுப்பும் பொருட்டு அங்கு போலீஸ், டி.என்.பி.எஸ்.சி. ரயில்வே மற்றும் வங்கிப் பணி உட்பட பல்வேறு போட்டித் தேர்வுகளுக்காக மருதம் இலவச பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது.

இம்மையத்தில் காவலர் தேர்வுக்கு படித்துக்கொண்டிருக்கும் மாணவ, மாணவிகளுக்கு மாதிரித் தேர்வு நடைபெற்றது. அதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்  சுகுணா சிங் பரிசு வழங்கி பாராட்டினார். அதுமட்டுமல்லாமல் போலீஸ் மற்றும் டி.என்.பி.எஸ்.சி. உட்பட பல்வேறு போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கு மாணவ, மாணவிகள் எவ்வாறு தயாராக வேண்டும்? என்பது பற்றி நிறைய அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் வழங்கினார்.

இந்நிகழ்வில் எஸ்.பி. சுகுணாசிங் அகரகட்டு கிராமத்தைச் சேர்ந்த ஐ.எப்.எஸ். அதிகாரி ராஜா, வட்டாட்சியர் ராஜ்குமார், கிங் ஆப் கிங்ஸ் மெட்ரிக் பள்ளியின் தாளாளர் பிஷப் எட்வர்ட் ராஜன் ஆகியோர் மாணவ, மாணவிகளை வாழ்த்திப் பேசினார்கள். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தென்காசி மாவட்ட செயலாளர் ஆசிரியர்  சுரேஷ்குமார் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

ஆசிரியர் மனோகர் ராஜதுரை வரவேற்புரை ஆற்றினார். மருதம் பயிற்சி மையத்தின் நிறுவனரும், ஒருங்கிணைப்பாளருமான ஆசிரியர் முத்துக்குமார் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். இந்நிகழ்ச்சியில் மங்களபுரம் மருதம் பயிற்சி மையத்தின் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் திரளானோர் பங்கேற்றனர்.
இப்பயிற்சி மையத்தின் துணை ஒருங்கிணைப்பாளரும் ஆசிரியருமான செல்வக்குமார் நன்றி கூறினார்.

தலைப்புச்செய்திகள்