Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆவின் பால் முகவர்கள் பாதுகாப்பு நலச்சங்கம் துவக்க விழா

அக்டோபர் 12, 2020 11:50

கோவை : கோவை மாவட்ட ஆவின் பால் முகவர்கள் பாதுகாப்பு நலச்சங்கத்தின் முதலாம் ஆண்டு, துவக்க விழா நிகழ்ச்சி கோவை சிவானந்தா காலனி பகுதியில் நடைபெற்றது.
கோவை மாவட்டத்தில் மட்டும், 700 ஆவின் பால் முகவர்கள் உள்ளனர்.  இவர்களை ஒன்றிணைக்க இதுவரையில் எந்த ஒரு, சங்கமும், துவங்கப்படவில்லை. இந்நிலையில் முதன் முறையாக இவர்களின், பல்வேறு இன்னல்களையும், குறைகளையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பார்வைக்கு, எடுத்து சென்று, அதனை நிவர்த்தி செய்ய பாலமாக செயல்படும் வகையில் அனைவரையும் ஒரே கோட்டில் நிலை கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஆவின் பால் முகவர்கள் பாதுகாப்பு நலச்சங்கம் உருவாக்கப்பட்டது.

இந்த சங்கத்தின் முதலாம் ஆண்டு துவக்கவிழா நிகழ்ச்சி சிவானந்தா காலனி பகுதியில் உள்ள, வடக்கு ஆவின் பால் விற்பனை மண்டல அலுவலகம் முன்பாக நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியினை, கோவை மாவட்ட ஆவின் தலைவர், கே,பி,ராஜு கலந்து கொண்டு பெயர் பலகையினை திறந்து வைத்து நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து இச்சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் பொருப்பாளர்கள் பதவியேற்றனர். அவர்களை தொடர்ந்து இச்சங்கத்தின் உறுப்பினர்களாக இணைந்துள்ள 250 பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. இந்த சங்கத்தின் தலைவராக மைக்கேல் ராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு அனைவரும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் அனைத்து முகவர்களின் சார்பில் தெரிவிக்கும் வண்ணம், சால்வை அனிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆவின் பால் முகவர்கள் பாதுகாப்பு நலச் சங்கத்தின் செயலாளர் சந்திரசேகர், பொருளாளர் முருகன், துணைத் தலைவர்கள் செல்வராஜ், முருகேசன், துணைச் செயலாளர்கள், சம்பத்குமார், மற்றும் ஆனந்தகுமார், செயற்குழு உறுப்பினர்கள், அலெக்சாண்டர், கணேசன், மணிகண்டன், லிங்கம், கோவிந்தராஜ், ரமேஷ் குமார், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
 

தலைப்புச்செய்திகள்