Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஆர்ப்பாட்டம்

அக்டோபர் 12, 2020 11:52

திருநெல்வேலி: தேவேந்திரகுல வேளாளர் என, ஒரே அரசாணை வெளியிட வலியுறுத்தி, திருநெல்வேலி குத்துக்கல் கிராமத்தில்,  தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் மாணவர் அணி சார்பில்,  நடந்த கோரிக்கை முழக்க போராட்டத்தில் திரளான ஆண்கள், பெண்கள் பங்கேற்றனர். பட்டியல் பிரிவில் உள்ள, குடும்பன், காலாடி, பண்ணாடி, கடையன், பள்ளன், வாத்தியான், தேவேந்திர குலத்தான் ஆகிய ஏழு உட்பிரிவுகளையும், ஒருங்கிணைத்து தேவேந்திர குல வேளாளர் என,  ஒற்றைப் பெயரில், அரசாணை வெளியிட வேண்டும் என,   மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின், மாணவர் அணி சார்பில்,  திருநெல்வேலியை அடுத்துள்ள, சிவந்திப்பட்டி குத்துக்கல் கிராமத்தில், கோரிக்கை முழக்க போராட்டம் நடைபெற்றது. 

மாவட்ட மாணவர் அணி செயலாளர் சிவந்தி முத்துப்பாண்டி தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக, தமிழக மக்கள் முன்னேற்றக் கட்சியின், திருநெல்வேலி மாவட்டத் தலைவர் கண்மணிமாவீரன் கலந்து கொண்டு, போராட்டத்தை துவக்கி வைத்தார். மாநில மகளிர் அணி செயலாளர் நளினி மள்ளத்தி, கண்டன உரை நிகழ்த்தினார். 

தங்களுடைய  கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷங்கள் எழுப்பினர். கட்சியின் நிர்வாகிகள் வீரபாண்டி,  அறிவாளன், சிலம்பரசன், மகளிர் அணி மகேஷ் மற்றும் கண்மணிலலிதா உட்பட  பலர் கலந்து கொண்டனர்.
 

தலைப்புச்செய்திகள்