Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

எச்.டி.எப்.சி ஏ.டி.எம். மிஷினை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர் கைது

அக்டோபர் 12, 2020 12:00

சென்னை: சென்னை அருகே மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ள எச்.டி.எப்.சி வங்கியின்  ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட போதை நபர் கைது செய்யப்பட்டார். சென்னை பழைய மகாபலிபுரம்சாலை துரைபாக்கம் காவல் நிலைய   சரகத்தில் அமைந்துள்ள ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள எச்.டி.எப்.சி வங்கியின்  ஏ.டி.எம்.மில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு சுமார் 12.30 மணிக்கு ஒரு நபர் உடைத்து திருட்டு முயற்சியில் ஈடுபடுவதாக போலீஸாருக்கு தகவல்  கிடைத்தது.

அப்போது ரோந்து பணியில் இருந்த தலைமைகாவலர் நந்தகோபால்    மற்றும் ஆயுதபடை காவலர் வெற்றிச்செல்வன் ஆகியோர் சம்பவ   இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு ஏ.டி.எம். மெஷினின்  பூட்டை  உடைத்து பணம் திருட முயன்ற நபரை கைது செய்தனர்.  

விசாரணையில் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நபர் பெரும்பாக்கம்   பகுதியை சேர்ந்த லாரன்ஸ் வயது 28 என்பதும், வடபழனியில் உள்ள    விஜயா மருத்துவமனையில் வேலை பார்த்து வந்ததும் தற்போது    வேலையை விட்டு நின்று விட்டதாலும் செலவுக்கு பணம் இல்லாததாலும்      தான் ஏ.டி.எம்.மில் திருட முயற்சித்ததாகவும் தெரிவித்தார்.

மேற்கண்ட நபரை காவல் நிலையத்தில் ஒப்படைத்து  நீதிமன்ற காவலுக்கு   அனுப்பி வைத்தனர். இரவு ரோந்து பணியில் விழிப்புடன் இருந்து தகவல்  கிடைத்தவுடன் சம்பவ  இடத்திற்கு விரைந்து சென்று ஏ.டி.எம்.மில் பணம்   திருட்டை தடுத்த ரோந்து காவல் துறையினரை காவல் ஆணையாளர்  வெகுவாக பாராட்டினார்.

தலைப்புச்செய்திகள்