Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கோயம்பேடு சந்தை மூலம் மீண்டும் கொரோனா? வியாபாரிகளின் கூட்டமை ப்புபிரதிநிதிகள் மறுப்பு

அக்டோபர் 12, 2020 12:06

சென்னை: கோயம்பேடு சந்தை மூலம் மீண்டும் கொரோனா தொற்று பரவுவதாக வெளியாகும் தகவல் உண்மையல்ல. முழு பாதுகாப்புடன் அனைத்து வியாபாரிகளும் கடையை திறக்க தயாராக இருக்கிறோம்,''  என்று  கோயம்பேடு அனைத்து (கனி, காய், மலர் மற்றும் உணவு தானிய) வியாபாரிகள் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் தெரிவித்தனர். சென்னை சேப்பாகத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் கோயம்பேடு அனைத்து (கனி, காய், மலர் மற்றும் உணவு தானிய) வியாபாரிகளின் கூட்டமை ப்புபிரதிநிதிகள். கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்
உணவு தானிய வியாபாரிகள் சங்க தலைவர் மணிவண்ணன் தெரிவித்ததாவது:

கோயம்பேடு சந்தையில் இருந்து கொரோன பரவியது என மே மாதம் பரப்பப்பட்ட தகவல் முற்றிலும் பொய்யானது. கொரோன தொற்று பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மட்டுமே கோயம்பேடு சந்தை மூடப்பட்டு மாற்று இடத்தில் செயல்பட்டது. தற்போது கோயம்பேடு சந்தியில் உள்ள காய்கறி கடைகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. அதிலும் மொத்த வியாபாரிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிறுவியபரிகள், மலர் பழ கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட உள்ள நிலையில் மீண்டும் கொரோனா பரவுவதாக தெரிவிக்கப்படுவத்தில் உண்மை இல்லை.

மாதாவரம், திருமழிசை காய்கறி சந்தைகளில் அடிப்படை வசதிகள் இன்றி பரிசோதனை செய்யப்படாமல் இயங்கி வந்தது. கோயம்பேடு சந்தையில் அடிப்படை வசதிகளுடன் முறையான பாதுகாப்புடன் வியாபாரிகள் தயாராக உள்ள நிலையில் கோயம்பேடு வியாபாரிகள் மூலம் கொரோனா பரவுகிறது என பரவும் தவறான தகவல் வேதனை அளிக்கிறது.  மேலும், கடந்த 22 நாட்களில் 3,200 மேற்பட்டோருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோன பரிசோதனையில் 50 மேற்பட்ட நபர்களுக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோயம்பேடு சந்தை வியாபாரிகளின் வெறும் ஒரு விழுக்காடினருக்கு மட்டுமே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் பலருக்கு சந்தைக்கு வெளியில் இருந்து வருவதால் மட்டுமே தொற்று ஏற்பட்டுள்ளது.

மாதவரம் திருமழிசையை விட கோயம்பேடு மிகுந்த பாதுகாப்போடே இருக்கிறது. வியாபாரிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து பெரும் பாதிப்பிற்குள்ளாகி உள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு விரைந்து கோயம்பேடு சந்தை திறக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்