Wednesday, 26th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அன்னுாரில் விலையுயர்ந்த செல்போன் பறிப்பு: சி.சி.டி.வி. உதவியால் குற்றவாளி கண்டுபிடிப்பு

அக்டோபர் 12, 2020 12:31

கோவை: அன்னுார் பஸ் நிலையத்தில் நின்றிருந்த வாலிபரிடம் விலையுயர்ந்த செல்போன் பறிக்கப்பட்ட வழக்கில் சி.சி.டி.வி. உதவியால் குற்றவாளியை போலீஸார் கைது செய்தனர். கோவை மாவட்டம் அன்னூர் காவல்நிலைய சரக எல்லைகளில் கோவை மாவட்ட கண்காணிப்பாளர் தலைமையில் பொதுமக்களின் அற்பணிப்போடு துவங்கப்பட்ட சி.சி.டி.வி. கேமரா செயல்பட்டு  வருகிறது.

சிறுமுகை லிங்காபுரம்  இளங்கோவடிகள் வீதியைச் சேர்ந்த பிரவீன்குமார் வயது 23, என்பவர் நேற்று காலை சுமார் 7.40 மணியளவில் வேலை நிமித்தமாக பெருந்துறை செல்ல வேண்டி அன்னூர் பஸ் நிலையத்தில் பஸ் ஏறும் போது யாரோ தன் பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்திருந்த REDMI  NOTE சுமார் ரூ.15,000 மதிப்புள்ள செல்போனை திருடி சென்றுவிட்டதாக கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

இவ்வழக்கின் எதிரியை கண்டுபிடிக்கும் பொருட்டு சி.சி.டி.வி. கேமரா மூலம் சம்பவ இடமான அன்னூர் பஸ்நிலையத்தில் பொருத்தப்பட்ட கேமரா மூலம் ஆய்வு செய்து பார்த்தனர். அப்போது புகார்தாரரிடமிருந்து ஒரு நபர் மொபைல் போனை திருடியது சம்மந்தமாக வீடியோ பதிவிறக்கம் செய்து பார்த்தபோது மொபைல்போன் திருடிய நபர் தங்கராஜ் வயது-31, ஈரோடு மாவட்டம் சத்தி தாலுக்கா தாசம்பாளையம், புளியம்பட்டியைச் சேர்ந்தவர் என தெரிய வந்தது.

மேற்படி எதிரியை நேற்றுமுன்தினம் கைது செய்தும் வாதியின் செல்போன் கைப்பற்றப்பட்டு, எதிரியை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் அற்பணிப்போடு துவங்கப்பட்ட சி.சி.டி.வி. கேமரா மூலம் கண்டுபிக்கப்பட்ட முதல் வழக்கு இது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பொதுமக்கள் அதிகப்படியான சி.சி.டி.வி கேமராக்களை அவர்களது இல்லங்கள் மற்றும் அலுவலகங்கள் போன்ற இடங்களில் பொருத்தினால்  குற்றச்சம்பவங்கள் வெகுவாக தடுக்கப்படும் என்றும் குற்றவாளிகளை பிடிக்க உதவியாக இருக்கும் என்று போலீஸார் தெரிவித்தனர்
 

தலைப்புச்செய்திகள்