Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கோவையில் சிறைநிரப்பும் போராட்டத்துக்கு தடை? அகில பாரத இந்து மகா சபா வேண்டுகோள்

அக்டோபர் 13, 2020 08:17

கோவை: இந்திய தேசிய லீக் கட்சி என்ற அடிப்படை மதவாத அமைப்பின் சார்பாக சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று அகில பாரத இந்து மகா சபா அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. அகில பாரத இந்து மகா சபா தமிழ்நாடு அமைப்பின் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி தலைவர் ஹோப்ஸ் லைஜு தலைமையில், கோவை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

வருகின்ற 16ம் தேதி இந்திய தேசிய லீக் கட்சி என்ற அடிப்படை மதவாத அமைப்பின் சார்பாக சிறை நிரப்பும் போராட்டம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், கோவை குண்டுவெடிப்பு சிறைக்கைதி, தடை செய்யப்பட்ட இயக்கம் அல் உம்மா தலைவர் பாட்ஷாவை விடுதலை செய்யக்கோரி இந்த  ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த 1998ம் வருடம் பிப்ரவரி 14ம் தேதி கோவை அரசு மருத்துவமனை, உட்பட பல்வேறு இடங்களில் பயங்கரவாதிகளின் குண்டு கோவையில் வெடிக்கப்பட்டது, இதற்கு பொறுப்பேற்ற அல் உம்மா அமைப்பு தடை செய்யப்பட்டு அதன் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். 

அதில், முக்கிய பங்காற்றியவர் பாஷா. கோவையில் 58 பேர் பலியானதற்கும், 200க்கும் மேற்பட்டோர் தனது உடல் உறுப்புகளை இழந்ததற்கும், கோடிக்கணக்கான அரசு சொத்துக்கள் மோசமானதற்கும், காரணமான பாஷாவை விடுதலை செய்யக்கூடாது. அவரை விடுதலை செய்தால் அமைதிப் பூங்காவான கோவை மீண்டும் கலவர பூமியாக மாறும் என்பதில் ஐயம் இல்லை. வருகிற 16ம் தேதி நடைபெறும், ஆர்ப்பாட்டத்தில் தேசத் துரோக செயல்கள், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளும் நடைபெற வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளதால் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது.

இவ்வாறு அகில பாரத இந்து மகா சபா தமிழ்நாடு இயக்கத்தின் சார்பாக வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தலைப்புச்செய்திகள்