Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கேரளா தங்கம் கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சுரேஷ்க்கு ஜாமீன்

அக்டோபர் 13, 2020 11:37

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரள மாநிலத்திற்கு தூதரகம் பெயரை பயன்படுத்தி 30 கிலோ தங்கம் கடத்தப்பட்டது. இதை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். இந்த கடத்தலுக்கு ஸ்வப்னா சுரேஷ் மூளையாக செயல்பட்டார் என குற்றம்சாட்டப்பட்டது.

என்.ஐ.ஏ, சுங்கத்துறை, அமலாக்கத்துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அமலாக்கத்துறை தொடர்ந்துள்ள வழக்கை எதிர்த்து எர்ணாகுளம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு ஸ்வப்னா சுரேஷ் மனு தாக்கல் செய்திருந்தார்.

கருப்பு பணம் தொடர்பான அமலாக்கத்துறை சார்பில் தொடரப்பட்ட இந்த வழக்கில் கோர்ட் ஜாமீன் வழங்கியுள்ளது. ஸ்வப்னா மீது காஃபிபோசா சட்டத்தின் கீழ் வழக்க தொடரப்பட்டுள்ளதால் அவரால் ஜெயிலில் இருந்து வெளியே வர முடியாது.

தலைப்புச்செய்திகள்