Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மூளை வளர்ச்சியில்லாத கட்சி காங்கிரஸ்- குஷ்பு

அக்டோபர் 13, 2020 11:43

சென்னை: காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய குஷ்பு டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி, தமிழக தலைவர் முருகன் ஆகியோர் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் நேற்று இணைந்தார். பாஜகவில் சேர்ந்து டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய குஷ்புவுக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். சென்னை விமான நிலையத்தில் பூக்களை தூவி குஷ்புவை வரவேற்ற பாரதிய ஜனதா கட்சியினர் ஆளுயர மாலையையும் அணிவித்தனர்.

இதையடுத்து குஷ்பு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* சிந்திக்க கூடிய மூளை வளர்ச்சியில்லாத கட்சி காங்கிரஸ்.

* காங்கிரசில் இருக்கிறவர்களுக்கும், கட்சியை விட்டு செல்கிறவர்களுக்கும் மரியாதை இல்லை.

* 6 வருடம் கழித்துத்தான் நான் நடிகை என காங்கிரஸ் கட்சிக்கு தெரிந்ததா?

* காங்கிரஸ் கட்சியினர் நடிகையாகத்தான் என்னை பார்த்தனர்.

* எல்.முருகன் எடுத்த முயற்சியால்தான் நான் பாஜகவில் இணைந்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.
 

தலைப்புச்செய்திகள்