Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பேரிடர்கால மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி: கடலூர் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

அக்டோபர் 14, 2020 07:32

கடலூர்: பேரிடர் காலங்களில் தீயணைப்புத்துறையினர் மேற்கொள்ளும் மீட்புப் பணிகள் குறித்த ஒத்திகையை மற்றும் மீட்புப் பணி உபகரணங்களை கடலூர் மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டார். வடகிழக்கு பருவமழை இன்னும் ஒருசில தினங்களில் துவங்க உள்ள நிலையில் தொடர்ந்து வடகிழக்கு பருவ மழையால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் கடலூர் மாவட்டத்தில் இந்தாண்டு வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மேற்கொள்ளவும், மீட்புப் பணிகள் குறித்த ஒத்திகையை தீயணைப்புத்துறையினரால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செய்து காட்டினர்.

இந்தவகையில் பேரிடர் காலங்களில் சிக்கிக்கொள்ளும் பொது மக்களை எவ்வாறு காப்பாற்றுவது? அவர்களுக்கு முதலுதவி அளிப்பது உள்ளிட்டவைகளை ஒத்திகைகளை மேற்கொண்டனர். மேலும் தீயணைப்பு துறையினர் மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் பயன்படும் உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சகாமூரி நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்ச்சியின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.

தலைப்புச்செய்திகள்