Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தென்காசி மாவட்டத்தில் நிரம்பி வழியும் அணைகள்

அக்டோபர் 14, 2020 07:45

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் உள்ள கடனா நதி அணை,  ராமா நதி அணை, ​கருப்பா நதி அணை, அடவிநயினார் அணை, குண்டாறு அணை ஆகிய 5 அணைகளும் சமீபத்தில் நிரம்பி வழிந்தன. இதையடுத்து அந்த அணைகளில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மழைப்பொழிவும் தொடங்கிவிட்டதால் அணைகளில் தற்போது முக்கால் பகுதிக்கு மேல் தண்ணீர் நிரம்பியுள்ளது. வெளியேற்றப்படும் நீரின் அளவை விட அதிகமான அளவுக்கு நீர்வரத்து இருப்பதால் வெள்ள அபாயம் ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு.

இந்நிலையில், தென்காசியின் 5 அணைகளிலும் உள்ள நீர் நிலவரம் பற்றிய விபரம் வருமாறு:
கடனா நதி அணை: உச்சநீர்மட்டம்: 85 அடி, நீர் இருப்பு: 73.70 அடி, நீர் வரத்து: 75 கன அடி, வெளியேற்றம்: 75 கன அடி. 
ராமா நதி அணை: உச்ச நீர்மட்டம்: 84 அடி, நீர் இருப்பு: 71 அடி, நீர்வரத்து: 62.87 கனஅடி, வெளியேற்றம் : 30 கனஅடி.
​கருப்பா நதி அணை: உச்சநீர்மட்டம்: 72 அடி, நீர் இருப்பு : 67.26 அடி, நீர் வரத்து: 38 கன அடி, வெளியேற்றம் : 15 கன அடி.
அடவிநயினார் அணை: உச்ச நீர்மட்டம்: 132.22 அடி, நீர் இருப்பு: 129.75 அடி, நீர் வரத்து 179 கன அடி, நீர் வெளியேற்றம்: 30 கன அடி.
​குண்டாறு அணை: உச்சநீர்மட்டம்: 36.10 அடி, நீர் இருப்பு: 36.10 அடி, நீர் வரத்து: 10 கன அடி, வெளியேற்றம்: 10 கன அடி.

வடகிழக்குப் பருவமழை நன்கு பெய்தால் இந்த அணைகள் முழு கொள்ளளவை எட்டும். தென்காசி மாவட்டத்தில் கோடை காலங்களில் தண்ணீர் பஞ்சம் நீங்கும். விவசாயிகளுக்கு தேவையான அளவு நீர் கிடைக்கும் என்று மக்களும், விவசாயிகளும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
 

தலைப்புச்செய்திகள்