Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாகை மாவட்ட புதிய எஸ்.பி. பொறுப்பேற்பு

அக்டோபர் 15, 2020 06:58

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஓம் பிரகாஷ் மீனா பொறுப்பேற்புக் கொண்டார். நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஓம் பிரகாஷ் மீனா நேற்று பொறுப்பேற்றுள்ளார். சென்னை தலைமையகத்திலிருந்து வந்த பணி நியமன உத்தரவின்படி நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பு வகித்த செல்வநாகரத்தினம் சென்னையில் நிர்வாக உதவி காவல்துறை தலைவராக பணியிடை மாற்றம் பெற்றுள்ளார்.

அதைத்தொடர்ந்து காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா சென்னையில் நிர்வாக உதவி காவல்துறை தலைவர் பதவியிலிருந்து நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார். இதன்பொருட்டு நேற்று காலை மாவட்ட காவல் அலுவலகத்திற்கு வருகை தந்த ஓம் பிரகாஷ் மீனா நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை சார்பில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முருகேஷ் பூங்கொத்து கொடுத்து மரியாதையுடன் வரவேற்பு அளித்தார்.

இதனைதொடர்ந்து கோப்புகளில் கையெழுத்திட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்ற பின்னர் ஓம் பிரகாஷ் மீனா செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
பொதுமக்கள் மற்றும் சமூகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய குற்றங்கள் கண்டறியப்பட்டு அவற்றை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். காவல்துறை உயர் அதிகாரிகளின் வழிகாட்டுதலுடன் நாகை மாவட்ட காவல்துறை மக்கள் நலனுக்காக தொடர்ந்து சீரிய முறையில் பணியாற்றும். 

குற்ற வழக்குகள் மற்றும் சட்டம் ஒழுங்கு தொடர்பான பிரச்சனைகளுக்கு கவனம் செலுத்தப்படும். காவல்துறை, பொதுமக்களிடையே சுமூகமான முறையில் நல்லுறவு ஏற்படுத்தப்படும். மேலும் நாகப்பட்டினம் மாவட்ட பொது மக்கள் அனைவரும் சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து பாதுகாப்புடன் செயல்பட வேண்டும். இவ்வாறு ஓம் பிரகாஷ் மீனா தெரிவித்தார்.

இந் நிகழ்ச்சியில் துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் சார்பு ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்