Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வி.ஜி.பி. நிறுவனத்தின் இடத்தை போலி ஆவணம் தயாரித்து கிரையம் குற்றவாளிகளை கைதுசெய்ய கோரிக்கை

அக்டோபர் 15, 2020 07:16

சென்னை: வி.ஜி.பி. நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தை போலி ஆவணம் தயரித்து கிரையம் செய்ததாக புகார் வழக்குப்பதிவு செய்து 2 மாதங்கள் ஆகியும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. உடனடியாக அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 

சென்னை வேளச்சேரி வி.ஜி.பி. செல்வா நகர் விரிவில் வி.ஜி.பி. நிறுவனத்திற்கு சொந்தமான 2,933 சதுர அடி கொண்ட இடத்தை போலி ஆவணம் தயாரித்து மோசடியில் ஈடுபட்டு சரஸ்வதி என்பவர் பெயரில் கிரையம் செய்து சொர்ணா செந்தில் என்பவருக்கு பொது அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. 

இந்த இடம் வி.ஜி.பி. குழுமத்திற்கு சொந்தமானது. கடந்த 2019ல் வில்லங்க சான்று சரிபார்த்த போது இரண்டு ஆவணங்கள் வந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த வி.ஜி.பி. நிறுவனம் அதன் அலுவலரான ஹரிகிருஷ்ணன் மூலம் காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டு கடந்த 30.07.2020 அன்று வேளச்சேரி காவல் நிலையத்தில் சரஸ்வதி, சொர்ணா செந்தில், ராகவாச்சாரி, செல்வின், சேகர் மற்றும் சுகுமார் ஆகியோர் மீது 420, 466, 468, 471 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். 

வழக்குப்பதிவு செய்ததோடு வேளச்சேரி போலீசார் குற்றவாளிகளை கைது செய்யாமல் கண்டு கொள்ளாமலும் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. போலி ஆவணம் தயாரித்து தனி நபரின் சொத்துக்களை அபகரிக்கும் கும்பலை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  வி.ஜி.பி. குழுமம் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்