Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தூத்துக்குடியில் கொலு பொம்மைகள் விற்பனை மும்மரம் 

அக்டோபர் 15, 2020 07:17

தூத்துக்குடி: நவராத்திரி விழாவுக்கான கொலு பொம்மைகளின் விற்பனை தூத்துக்குடியில் துவங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது.  இந்துகளின் முக்கிய விழாவான நவராத்திரி விழா இன்று 16ம் தேதி துவங்க உள்ளது. நவராத்திரி விழாவில் அனைத்து இந்து மக்கள் வீட்டிலும் கொலுக்கள் அமைத்து அதில் அனைத்து சுவாமி பொம்மை சிலைகளை வைத்து நவராத்திரி விழா நடைபெறும். ஒன்பது நாட்கள் நடைபெறும் இந்த நவராத்திரி விழாவில் சிறப்பு வழிபாடுகளை நடத்துவர்கள்.

இந்த நவராத்திரி விழாக்கான கொலு பொம்மைகள் விற்பனை தூத்துக்குடியில் துவங்கி நடைபெற்று வருகிறது.  தூத்துக்குடியில் கொலு பொம்மைகளின் விற்பனை மற்றும் கண்காட்சி துவங்கி நடைபெற்று வருகிறது. முருகன், விநாயகர், ராமர், மீனாட்சி, லட்சுமி, சரஸ்வதி, கிருஷ்ணன், தாசவரதார சிலைகள், சிவன், பார்வதி, காளி மற்றும் கல்யாண செட் உள்ளிட்ட பல்வேறு சாமி பொம்மைகள் சென்னை, காஞ்சிபுரம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர், உள்ளிட்ட தமிழகம் மட்டுமல்லாமல் மும்பை, ஆந்திரா, போன்ற வெளிமாநிலத்தில் இருந்தும் கொலுபொம்மைகள் கொடுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த ஆண்டு அத்திவரதர் சிலையை பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். இந்த கொலு பொம்மைகள் பேப்பர் கூல் பீங்கன், களிமண், சிமெண்ட் உள்ளிட்ட பொருட்கள் மூலம் தயாரிக்கப்பட்ட இந்த பொம்மைகள் மிகவும் அழகாக காட்சி தருகிறது. மிகவும் கலை நயத்துடன் தயாரிக்கப்பட்ட இந்த கொலு பொம்மைகள் 10 ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஆண்டு புதிய வகையில் செய்யப்பட்ட பொம்மைகள் அதிகம் வந்துள்ளது. இதை பொதுமக்கள் வாங்கி செல்வதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

நவராத்திரி விழாவையொட்டி கொலு வைப்பதற்கு சுவாமி பொம்மைகளை வாங்கி சென்று வீட்டில் ஓன்பது நாட்களும் கொலுவில் ஒவ்வொரு நாளும் விதவிதமான பொம்மைகள் வைத்து வழிபாடு செய்யவர்கள் இதன் மூலம் ஐஸ்வரியம் பெருகும் என்ற வகையில் நவராத்திரி விழா கொண்டப்படுகிறது.

தலைப்புச்செய்திகள்