Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உலக கை கழுவும் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

அக்டோபர் 15, 2020 07:44

பெரம்பலூர்: பெரம்பலூரில் உலக கை கழுவும் தினம் முன்னிட்டு  அரசு ஆரம்ப சுகதார நிலையத்தில் புறநோயாளிகள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
அக்டோபர் 15ம் தேதி (நேற்று) உலக கை கழுவும் தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. அதை போல் நேற்று பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் அரசு ஆரம்ப சுகதார நிலையத்தில் தனிமனித இடைவேளை கடைப்பிடித்தும் முகக்கவசம் அணிந்து கைகழுவும் தினம் கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், மருத்துவர் அருண்குமார் (பொறுப்பு) தலைமை தாங்கினார். செட்டிகுளம் ஒன்றிய கவுன்சிலர் திருநாவுக்கரசு, ஊராட்சி மன்ற தலைவர் கலா தங்கராசு, துணைத் தலைவர் காமாட்சி ராமராஜ் முன்னிலை வகித்தனர். பின்பு மருத்துவர் அருண்குமார் பேசிதாவது: கைகழுவும் தினம் பற்றியும், கைகழுவும் முறைகள், சாப்பிடுவதற்கு முன்பும் சாப்பிட்ட பின்பும், கழிப்பறை சென்று வந்த பின்னரும் கைகளை சோப்பு போட்டு நன்கு கழுவ வேண்டும் என்றும் விளக்கி கூறி நோயாளிகளுக்கு கைகளை சோப்பு போட்டு கழுவ பயிற்சி கொடுத்தார். கலந்து கொண்ட அனைவருக்கும் முகக்கவசம்,சோப்பு வழங்கப்பட்டது.

இதில் தன்னார்வலர் ராம்குமார்,  வீரராஜா, விஜய் அரவிந்த், செட்டிகுளம் அரசு ஆரம்ப சுகாதார செவிலியர், மருந்தாளுநர், சுகாதார ஆய்வாளர், கிராம பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.
 

தலைப்புச்செய்திகள்