Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 4 யூனிட்களில் மின் உற்பத்தி நிறுத்தம்

அக்டோபர் 16, 2020 09:05

தூத்துக்குடி: தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் ஒரே நேரத்தில் 4 யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டதால் 840 மெகாவாட் அளவுக்கு மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட 5 யூனிட்டுகள் மூலம் சராசரியாக 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. பழுது, பராமரிப்பு பணி காரணமாக அனல் மின்நிலையத்தில் அடிக்கடி மின் உற்பத்தி தடைபடும்.

இந்நிலையில் தற்போது 1, 2, 3, 5 ஆகிய 4 யூனிட்டுகள் இயங்கவில்லை. இதனால் 840 மெகாவாட் அளவுக்கு மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 4-வது யூனிட் மட்டும் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காற்றின் வேகமும், அணைகளுக்கு வரும் நீர்வரத்தும் தொடர்ந்து சீராக உள்ளது. எனவே, இவற்றின் மூலம் உற்பத்தி செய்யும் மின்சாரத்தின் அளவும் அதிகரித்து வருகிறது. இதனால் மின் மின்தேவை குறைவு காரணமாக மின்வாரியத்தின் அறிவுறுத்தலின் பேரிலேயே 4 யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தலைப்புச்செய்திகள்