Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து தேவையில்லை- அமைச்சர் கேபி அன்பழகன்

அக்டோபர் 16, 2020 11:12

தர்மபுரி: தர்மபுரியில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து கிடைத்தால் 69% இடஒதுக்கீடு பாதிக்கப்படக்கூடும்.

* உயர் சிறப்பு அந்தஸ்து வந்தால் மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு, கூடுதல் கட்டணம் வர வாய்ப்பு நேரிடும். நுழைவுத்தேர்வு, கூடுதல் கட்டணம் மூலம் மாணவர்கள் பாதிக்கப்படுவர்.

* உயர் சிறப்பு அந்தஸ்து மூலம் வெளிமாநில மாணவர்கள் அதிகமாக வர வாய்ப்புள்ளது. இதனால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்படுவர்.

* அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரித்தாலும் அண்ணா பெயர் நீக்கப்படாது.

இந்த நிலையெல்லாம் வரக்கூடாது என்பதற்காகத்தான் உயர் சிறப்பு அந்தஸ்து வேண்டாம் என அரசு நினைக்கிறது. சிறப்பு அந்தஸ்துக்காக எதையும் பறிகொடுக்க தமிழக அரசு தயாராக இல்லை. நாம் ஏற்கனவே நல்ல நிலையில்தான் இருக்கிறோம்; அதனால் உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்