Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்குலாம் நபி ஆசாத்துக்கு கொரோனா பாதிப்பு 

அக்டோபர் 16, 2020 11:24

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சாமானிய மக்கள் மட்டுமின்றி கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள சுகாதாரத் துறை பணியாளர்கள், களப்பணியில் ஈடுபட்டுள்ள அரசியல் தலைவர்கள், தன்னார்வலர்கள் என அனைத்து தரப்பினரையும் கொரோனா விட்டு வைக்கவில்லை.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான குலாம் நபி ஆசாத் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் தனது பரிசோதனை முடிவு தெரியவந்ததும், மருத்துவர்களின் ஆலோசனைப்படி வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். மேலும், கடந்த சில தினங்களாக தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

தலைப்புச்செய்திகள்