Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில் அ.தி.மு.க. 49ம் ஆண்டு விழா: சொந்த ஊரில் முதல்வர் கொடியேற்றினார்

அக்டோபர் 17, 2020 06:40

சேலம்: அ.தி.மு.க.வின் 49வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில் கட்சியின் கொடியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்றி வைத்தார். அங்கு வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர்,  ஜெயலலிதா ஆகியோரின் உருவப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தி.மு.க.வில் இருந்து விலகிய எம்.ஜி.ஆர். 1972ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி அ.தி.மு.க.வை தொடங்கினார். எம்.ஜி.ஆர். மறைவிற்குப் பிறகு 30 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சியை கட்டிக்காத்தார் ஜெயலலிதா. அவரது மறைவிற்குப் பிறகு எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் கட்சியை பாதுகாத்து வருகின்றனர்.

தனக்குப் பிறகும் 200 ஆண்டுகாலம் அ.தி.மு.க. ஆட்சிக்கட்டிலில் இருக்கும் என்று சொன்னார் ஜெயலலிதா. அ.தி.மு.க. நேற்று தனது  49ம் ஆண்டில் அடியெடுத்து வைத்தது. அ.தி.மு.க. தொடக்கவிழாவை தமிழகம் முழுவதும் தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி சொந்த ஊரான சிலும்பாளையத்தில் அ.தி.மு.க.வின் கட்சிக்கொடியை ஏற்றி வைத்தார். தாயார் மறைவினால் சேலம் சென்றுள்ள பழனிச்சாமி அங்கேயே கட்சியின் கொடியை ஏற்றி வைத்து தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.

சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்திலும் இந்த விழா கோலாகலமாக கொண்டப்படுகிறது. அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பி.எஸ். தலைமையில் விழா நடைபெற்றது. இதனையொட்டி ராயப்பேட்டை பகுதியே விழாக்கோலம் பூண்டுள்ளது. 

தலைப்புச்செய்திகள்