Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

முக்கூடலில் வளர்ப்பு யானை திடீர் மரணம்

அக்டோபர் 19, 2020 05:34

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் பகுதியில், வளர்ப்பு யானை திடீரென மரணம் அடைந்தது குறித்து வனத்துறை உயர்அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். தென்காசி மாவட்டம்,  பொட்டல்புதூரை அடுத்துள்ள, ரவணசமுத்திரத்தை சேர்ந்தவர் தாவூத் மீரான் (வயது.45). கோவில் திருவிழாக்களுக்கு, வாடகைக்கு விடுவதற்கென,  இவர் கடந்த ஐந்து வருடங்களாக, 54 வயதுடைய லெட்சுமி என்னும் பெயருடைய, பெண் யானை ஒன்றை பராமரித்து வந்தார்.

ரவணசமுத்திரத்தில் இருந்து, முக்கூடல் தாமிரபரணி ஆற்றுக்கு,  தாவூத் மீரான் யானையை அழைத்து வந்தார். அங்கு யானையை, குளிப்பாட்டிய பிறகு, அருகில் இருக்கும்,  முத்துமாலை அம்மன் திருக்கோவிலின் பின்புறம், யானையைக் கட்டி வைத்து விட்டு, அவரும், அங்கேயே யானையுடன், உறங்கினார். இந்நிலையில், அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்த,  அந்த யானை நேற்றுமுன்தினம் அதிகாலை ஒருமணியளவில்,  திடீரென  இறந்து கிடந்ததை, தாவூத் மீரான் கண்டு, அதிர்ச்சி அடைந்தார்.  யானை இறந்ததற்கான காரணத்தை,  அவரால் உடனடியாக, அறிந்து கொள்ள முடியவில்லை.  

எனவே, யானை இறந்தது குறித்து, கடையம் வனத்துறைக்கு, தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு, கால்நடை உதவி இயக்குநர் ஜான் சுபாஷ்,  வன கால்நடை மருத்துவர் மனோகர், கால்நடை மருத்துவர் சிவமுத்து மற்றும் பணியாளர்களுடன் விரைந்து வந்த,  வனத்துறை உயர்அலுவலர்கள், யானையை பார்வையிட்டு, ஆய்வு செய்ததுடன், இறந்தது குறித்து,   விசாரணையும்  மேற்கொண்டனர்.

இறந்து போன யானையை, மருத்துவ பரிசோதனை செய்த பிறகே, யானை உயிர் இழந்ததற்கான காரணம் தெரிய வரும். இந்த ஒருவாரத்தில் மட்டும்,  திருநெல்வேலி மாவட்டத்தில், இறந்து போன, இரண்டாவது யானை இது என்பதால், வனவிலங்கு ஆர்வலர்களிடையே, இது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

தலைப்புச்செய்திகள்