Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கடல் போல் காட்சியளிக்கும் செம்பரம்பாக்கம் ஏரி

அக்டோபர் 19, 2020 10:01

சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளுள் ஒன்றான செம்பரம்பாக்கம்ஏரி கடந்த ஆண்டு வறண்டு கிடந்தது. தற்போது நீர் நிறைந்து கடல் போல காட்சியளிக்கிறது. இதற்கு முழுக்க, முழுக்க கிருஷ்ணா நதி நீரால் செம்பரம்பாக்கம் ஏரி முழுவதும் நிறைந்துள்ளது. ஒரு காலண்டர் ஆண்டுக்கு 12 மில்லியன் கோடி கன அடி நீர் கிருஷ்ணா நதியில் இருந்து நமக்கு கொடுக்க வேண்டும், கடந்த ஆகஸ்ட் மாதம் வரை 8 மில்லியன் கோடி கன அடி நீர் கிடைத்துள்ளது. ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் மழை அதிகளவில் பெய்து வருவதால் தற்போது மீண்டும் கிருஷ்ணா நதி நீர் திறக்கப்பட்டுள்ளது.

இதனால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. தற்போது ஏரியின் நீர் மட்ட உயரம் 16.31அடியாகவும், 1,780 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. 480 கன அடி நீர் ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது. சென்னை குடிநீருக்கு தினந்தோறும் 59 கன அடி நீர் எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது கோயம்பேட்டில் இருந்து மூன்றாம் கட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஸ்ரீபெரும்புதூர் சிப்காட்டிற்கு சென்று கொண்டிருப்பதால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து சிப்காட்டிற்கு தண்ணீர் கொடுப்பது நிறுத்தப்பட்டுள்ளது.

அவ்வப்போது பெய்த மழையால் ஏரி சற்று நிரம்பினாலும் முழுக்க, முழுக்க கிருஷ்ணா நதி நீரால் மட்டுமே தற்போது ஏரி முழுவதும் நிரம்பி ரம்மியமாக காட்சியளிக்கிறது. மேலும் தமிழகத்தில் பருவ மழை கை விட்டாலும் கிருஷ்ணா நதி நீரால் செம்பரம்பாக்கம் ஏரி நிறைந்து காணப்படுகிறது. நீரின் வரத்து அதிகரிப்பால் தொடர்ந்து ஏரியின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
 

தலைப்புச்செய்திகள்