Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சார்-பதிவாளருக்கு லஞ்சம் கொடுக்க ரூ.10,000 கேட்டு ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தவிவசாயிகள்

அக்டோபர் 20, 2020 05:44

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் தடையில்லா சான்று வழங்க 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட சார் பதிவாளருக்கு பணம் தர வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் பத்தாயிரம் ரூபாய் கேட்க விவசாயிகள் வந்ததால் பரபரப்பு நிலவியது. கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திரன் பானு ரெட்டியை சந்தித்து 10 ஆயிரம் ரூபாய் கடன் வாங்க பர்கூர் ஒன்றியம் குருவினாயனப்பள்ளி பகுதியைச் சேர்ந்த முனிரத்தினம், சக்திவேல் ஆகிய இரு விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர்.

இதுகுறித்து ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அவர்கள் தெரிவித்ததாவது:
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள சேட்டை பகுதியை சேர்ந்த விவசாயிகள் எங்களுடைய நிலத்தை பத்திர பதிவு செய்ய தடையின்மை சான்று வேண்டி வட்டாட்சியரிடம் மனு அளித்தோம். ஆனால் வட்டாட்சியர் , சார்பதிவாளரிடம் இருந்து மேற்கண்ட நிலத்திற்கு வழிகாட்டி மதிப்பு நிர்ணயம் சம்பந்தமாக தடையின்மைச் சான்று வாங்கி வருமாறு எங்களுக்கு தபாலில் கடிதம் அனுப்பினார்.

இதைத்தொடர்ந்து நாங்கள் இருவரும் பர்கூர் சார்பதிவாளர் அவரிடம் சென்று தடையில் தடையின்மைச் சான்று கேட்டோம். தடையின்மைச் சான்று கொடுக்க வேண்டும் என்றால் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுங்கள் என கேட்டார். அவரிடம் நாங்கள் ஏழை விவசாயிகள் எங்களிடம் அவ்வளவு தொகை இல்லை என கூறினோம். ஆனாலும் லஞ்சம் தந்தால் மட்டுமே தடையின்மைச் சான்று தர முடியும் எனக்கூறி எனக் கூறி எங்களை திருப்பி அனுப்பி விட்டார்.

இதனால் மிகவும் கவலை அடைந்த நாங்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து எங்களுக்கு பத்தாயிரம் ரூபாய் உதவி செய்யுங்கள். அதை சார்பதிவாளரிடம் கொடுத்து நாங்கள் தடையின்மைச் சான்று பெற்றுக் கொள்கிறோம் என மனு கொடுக்க வந்துள்ளோம். இவ்வாறு பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெரிவித்தனர். இரு விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் 10,000 ரூபாய் கேட்க வந்த சம்பவம் மாவட்ட ஆட்சியரகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தலைப்புச்செய்திகள்