Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

எடப்பாடி பழனிசாமி முதல்வர் பதவியை மத்திய அரசிடம் அடகு வைத்து விட்டார்: ஸ்டாலின்

மார்ச் 25, 2019 09:51

திருப்போரூர்: தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் திருப்போரூரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியதாவது. இங்கு வெயிலின் கொடுமை அதிகமாக உள்ளது. கூடவே ஆட்சி கொடுமையும் உள்ளது. ஆட்சி கொடுமையை ஒரு வார காலத்தில் உங்களிடமிருந்து காப்பாற்றப் போகிறோம். வெயில் கொடுமையில் உங்களை காக்க வைக்க விரும்பவில்லை. 

பா.ஜனதா, அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளும் மக்களை பற்றி கவலைபடப்வில்லை. பதவி ஒன்றே இருவரின் குறிக்கோள். பதவியில் நீடிக்க, பதவியை காப்பாற்றிக் கொள்ள இருவரும் சுயநலமாக செயல்படுகிறார்கள். ஒரே சுயநலமாக உள்ள இருவரும் கூட்டு சேர்ந்துள்ளார்கள். 

ஊழல்வாதிகளுடன் தான் மோடி கூட்டுவைத்துள்ளார். மோடி மக்களிடத்தில் ஊழல் இல்லாத ஆட்சி தருவேன் என்று கூறினார். ஆனால் இன்று ஊழலோடு ஊழல் கூட்டணி அமைத்துள்ளது. இந்திய பாதுகாப்பு துறையில் ஹெலிகாப்டர் வழங்கியதில் ஊழல் இன்று சந்தி சிரிக்கிறது. 

மக்களை ஏமாற்றும் வித்தையை மோடி தெரிந்து வைத்துள்ளார். ஏமாற்றும் வித்தையை தொடர்ந்து செய்து வருகிறார். 

தர்மம், அதர்மம் என எடப்பாடி பேசி வருகிறார். தர்மத்தை பற்றி பேச அவருக்கு என்ன அருகதை உள்ளது. அதைபற்றி எடப்பாடி, பன்னீர்செல்வம் இருவருக்குமே தெரியும். 

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது. திருப்பரங்குன்றம் தேர்தல் வெற்றி செல்லாது என தீர்ப்பு வந்துள்ளது. இதிலிருந்து ஜெயலலிதா கைரேகை வைக்கவில்லை. அவருடைய மரணத்தில் சந்தேகம் இருப்பது உண்மையாகியிருக்கிறது. என்ன நடந்திருக்கும் என எல்லாரும் யூகிக்க முடியும். 

அமித்ஷா, மோடியிடம் அ.தி.மு.க. கட்சியை அடமானம் வைத்தால் கூட பரவாயில்லை. முதல்வர் பதிவியை அடமானம் வைத்துள்ளனர். அதை கண்டிப்பாக மீட்க முடியாது. 

நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்கள் மீது விசாரணை நடத்தி அதற்குரிய தண்டனையை வாங்கி தருவோம். 

கலைஞரின் வழியில் வந்தவன் நான். அவர் காட்டிய பாதையில் செல்கிறேன். இந்த வெற்றிக்கணியை பறித்து அவருடைய நினைவிடத்தில் வைப்பேன். இவ்வாறு அவர் பேசினார்.

தலைப்புச்செய்திகள்