Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

விஜயவாடா கனகதுர்கா கோயிலில் நிலச்சரிவு: இடிபாட்டில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரம் 

அக்டோபர் 23, 2020 07:24

விஜயவாடா: ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் கனகதுர்கா கோயிலில் நிலச்சரிவு ஏற்பட்டு துப்புரவு பணியாளர்கள் உள்பட 4 பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. அவர்களை மீட்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது. விஜயவாடாவில் இந்திரா கீழாத்ரி மலைக்குன்றுவில் கனகதுர்கா கோயில் உள்ளது. இந்த கோயிலில் கடந்த புதன்கிழமை மாலை பல கற்பாறைகள் உருண்டு கோயிலின் கொட்டகை மீது விழுந்தது.

இந்த சம்பவத்தால் 5 பேர் காயமடைந்தனர். இரு துப்புரவு பணியாளர்கள் உள்பட 4 பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். சம்பவம் குறித்து தகவலறிந்த மீட்பு படையினர் விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தசரா திருவிழா 10 நாட்கள் நடக்கிறது. கடந்த 17ம் தேதி விழா தொடங்கியது. இந்த கோயிலில் ஏராளமான பக்தர்கள் கூடினர். இந்த அசம்பாவித சம்பவத்தால் மக்கள் பீதியடைந்தனர். இந்த சம்பவம் நடைபெறுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வருவதாக இருந்தது. நிலச்சரிவு ஏற்பட்டதால் அவரது வருகை ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

தலைப்புச்செய்திகள்