Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

முதல்வர் பிரசாரம் தள்ளிவைப்பா ?

மார்ச் 26, 2019 05:08

சென்னை: கடந்த சில நாட்களாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள முதல்வர் இ.பி.எஸ்.,சுக்கு தொண்டை வலி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன்காரணமாக அவர் இன்று சென்னையில் பிரசாரம் செய்வாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

தேர்தல் அறிவித்த நாள் முதல் சேலம், தர்மபுரி, வேலூர், அரக்கோணம், என பல்வேறு மாவட்டங்களில் இ.பி.எஸ். சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். வேனில் இருந்தபடி பிரசாரம் செய்து வரும் முதல்வர் மைக் மூலம் பேசியதால் அவரது தொண்டை சிறிது பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து காலர் மைக் மற்றும் கார்டுலஸ் மைக் மூலம் பிரசாரம் செய்தார். 

வட்டமடித்த அதிகாரிகள் 

இந்நிலையில் சென்னை திருவல்லிக்கேணியில் இன்று (26 ம் தேதி) காலை 8 மணிக்கு தொடங்கவிருந்த முதல்வர் பழனிசாமியின் தேர்தல் பிரசாரம் திடீர் ரத்து செய்யப்பட்டுள்ளது. முதல்வர் எங்கு பிரசாரம் செய்கிறார் என அதிகாரிகள் தேடி அலைந்தனர். அதிகாரிகளின் வாகனங்கள் திருவல்லிக்கேணி மாடவீதிகளில் வட்டமடித்து வந்து கொண்டே இருந்தன. 

முதல்வரின் உடல்நிலை (தொண்டையில் கர.,கர.,) சரியில்லாத காரணத்தால் இன்று காலை மேற்கொள்ளவிருந்த பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தகவல் தெரிவிக்கிறது. மேலும் பகல் 12.30 மணிக்கு துவங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தலைப்புச்செய்திகள்