Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்த காங்கிரஸ் எம்எல்ஏ

அக்டோபர் 25, 2020 11:53

போபால்: மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ ராகுல் லோதி இன்று திடீரென எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை, இடைக்கால சபாநாயகர் ரமேஷ்வர் சர்மாவிடம் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து முதல்வர் சிவராஜ் சிங் சவுகானை ராகுல் லோதி சந்தித்தார். அவர் முன்னிலையில் தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார். ராகுல் லோதிக்கு சால்வை அணிவித்து வரவேற்று வாழ்த்தினார் சவுகான். 

தலைப்புச்செய்திகள்