Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இடிந்தகரை, கூடுதாழை,  கூட்டப்புளி தூண்டில் வளைவு கடலோர கிராம மீனவர்களிடம் எம்.பி. ஆலோசனை

அக்டோபர் 26, 2020 06:11

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில்  இடிந்தகரை, கூடுதாழை,  கூட்டப்புளி கடலோர கிராமங்களில்,  தூண்டில் வளைவுகள் அமைக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் நேரில் பார்வையிட்டு மீனவர்களிடம் ஆலோசனையில் ஈடுபட்டார். ஒவ்வொரு ஆண்டும், ஆழிப் பேரலைகள், புயல்கள் மற்றும் மழை வெள்ளம் போன்ற, இயற்கை பேரிடர் காலங்களின் போது, திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட, ராதாபுரம் தாலுக்காவில் மொத்தம்  உள்ள, 10 கடலோரக்காவல் கிராமங்களில்,  கூட்டப்புளி, கூடுதாழை, இடிந்தகரை, பெருமணல் மற்றும் தோமையர்புரம் ஆகிய 5 கிராமங்கள், அதிகளவில் பாதிக்கப்படுகின்றன.

அடிக்கடி சூறைக்காற்றுகள் பலமாக வீசுவதாலும், கடல்சீற்றம் மற்றும் கடல் அரிப்பு காரணமாக,   கடல் நீர் உட்புகுந்து விடுவதாலும், இந்த கிராமங்களில் வசிக்கும் மீனவர்களின் குடியிருப்புகள் பெருமளவில் சேதம் அடைந்து விடுகின்றன. இவற்றையெல்லாம் கருத்திற்கொண்டு, இந்த மீனவக் கிராமங்களில்,  நிரந்தர தூண்டில் வளைவுகள் அமைத்துத் தர வேண்டும் என, மத்திய மீன்வளத்துறைக்கு, தனிப்பொறுப்பு வகித்து வரும், மத்திய கால்நடை பராமரிப்பு துறை மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் கிரிராஜ் சிங்கிற்கு, திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. உறுப்பினர் ஞானதிரவியம், அலுவல் ரீதியாக, கடிதம் மூலம், கோரிக்கை விடுத்திருந்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஞான திரவியத்தின் கோரிக்கையினை,  ஏற்றுக்கொண்ட, மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், தம்முடைய துறையின் உயர் அலுவலர்களை, அந்த மீனவக்கிராமங்களுக்கு நேரடியாக அனுப்பி, தூண்டில் வளைவுகள் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகளையும், அதற்கான நிதித்தேவைகளையும் ஆராய்ந்து வருமாறு, உத்தரவு பிறப்பித்தார்.  அதன்படி அவர்களும், இக்கிராமங்களுக்கு நேரில் வந்து, முறைப்படி ஆய்வு செய்து, மதிப்பீடு தயார் செய்து, டெல்லி திரும்பியுள்ளனர். மத்திய மீன்வளத்துறை உயர் அலுவலர்களின் ஆய்வினை தொடர்ந்து, திருநெல்வேலி நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினர் ஞான திரவியம்  இடிந்தகரை, கூடுதாழை,  கூட்டப்புளி ஆகிய, மூன்று கடலோரக் கிராமங்களையும் நேரில் பார்வையிட்டு, தூண்டில் வளைவுகள் குறித்தும், அவை அமையும் இடங்கள் குறித்தும், மீனவப் பிரதிநிதிகளுடன், ஆலோசனை நடத்தினார்.

இந்நிகழ்ச்சியின் போது, தி.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஜோஸப் பெல்ஸி, மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் எரிக் ஜூட், முன்னாள் ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் அனிதா பிரின்ஸ், மாவட்ட துணை அமைப்பாளர்கள் தொண்டர் அணி தனபால், விவசாய தொழிலாளர் அணி கண்ணன்,  இடிந்தகரை கிளை செயலாளர் இளங்கோ ராஜேஷ் மற்றும் கட்சியின் பல்வேறு பிரிவு நிர்வாகிகள் ராமு, பென்சிலால், சூசை,  பவுல், பிரிட்டோ, எழிலரசன் ஞானராஜ், டென்னிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 

தலைப்புச்செய்திகள்