Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அடியாட்களுடன் வந்து மகனை கடத்த முயன்ற தாய்: கோவையில் பரபரப்பு சம்பவம்: போலீஸார் விசாரணை

அக்டோபர் 26, 2020 06:23

கோவை: கோவை இடையர்பாளையம் பூம்புகார் நகர் பகுதியில் கணவனிடம் இருக்கும் குழந்தையை மீட்க அடியாட்களுடன் மனைவி வந்திருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குழந்தையை கடத்த வந்ததாக துடியலூர் காவல் நிலையத்தில் கணவர் புகார் அளித்துள்ளார். இதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை இடையர்பாளையம் பூம்புகார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் நாககணேஷ். இவர் கோவையில் மருந்து மொத்த விற்பனையாளராக இருந்து வருகிறார். இவருக்கும் அரியலூரில் நகைக்கடை வைத்துள்ள தியாகராஜன் என்பவரது மகள் ஐஸ்வர்யாவுக்கும் கடந்த 2013ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு ராஜேந்திரன் என்ற 7 வயது மகன் உள்ளார்.

கணவன், மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த 2016ம் ஆண்டு முதல் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இருவருக்கும் இடையேயான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனிடையே கடந்த 2019ம் ஆண்டு இருவரும் சுமூகமாக பிரிந்து செல்ல உடன்பட்டு வழக்கறிஞர்களைக் கொண்டு பேசி கணவர் நாககணேஷ் மனைவி ஐஸ்வரியாவிற்கு 65 லட்சம் பணம் மற்றும் நகை அடகு கடை ஆகியவைகளை கொடுத்து பிரிந்து செல்வது என முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

இதுகுறித்த ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும் முன் கொரோனா தொற்று ஏற்பட்டதால் காலதாமதம் ஆகியுள்ளது கூறுகின்றனர். அதுவரை அவரது தன்னுடன் இருந்த மகன் ராஜேந்திரனை எழுத்துப்பூர்வமாக எழுதி கொடுத்து ஐஸ்வர்யா தனது கணவருடன் அனுப்பி வைத்ததாக தெரிகிறது. அதன் பின் இதுவரை எந்தவித தொடர்பும் இல்லாமல் இருந்துள்ளார்.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் மதியம் இடையர்பாளையத்தில் உள்ள நாககணேசின் வீட்டிற்கு 3 பேர் காரில் வந்துள்ளனர். காரை வீட்டின் முன் நிறுத்திவிட்டு ஒருவர் கேட் அருகே நின்று கொள்ள மற்ற இருவர் 2 பேர் உள்ளே நுழைந்தனர். உள்ளே வந்த 2 பேர் நாககணேசின் அவரது தாயை தள்ளிவிட்டு உள்ளிருந்த ராஜகணேஷ் மகனை தூக்கிச் செல்ல முயற்றுள்ளனர்.

இதைப் பார்த்த நாககணேஷ் நீங்கள் யார்? என கேட்டு அவர்களை தடுத்துள்ளார். அதற்குள் நாககணேஷின் தந்தை குழந்தையை தூக்கிக் கொண்டு வீட்டின் படுக்கை அறைக்குள் சென்று கதவை தாளிட்டுக் கொண்டார். உள்ளிருந்தவாரே போலீஸுக்கு போன் செய்துவிட்டேன் என கூறியுள்ளார். இதனால் அச்சமடைந்த சிறுவனை கடத்த முயன்ற 2 பேரும் வீட்டிற்கு வெளியே வந்துவிட்டனர். அப்போது சத்தம் போட்டபடியே வெளியே வந்த நாககணேஷ் வீட்டிற்கு வெளியே நின்ற காரை பார்த்த போது அதில் அவரது மனைவி ஐஸ்வர்யா இருந்துள்ளார்.

செல்போனை எடுத்து வந்து அவர்களை போட்டோ எடுக்க முயன்றபோது அதற்குள் காரை எடுத்துக் கொண்டு வீட்டினுள் வந்த 3 பேருடன் அங்கிருந்து சென்று விட்டனர். இவை அனைத்தும் அவரது வீட்டின் அருகே பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது. இதனைக் கொண்டு துடியலூர் காவல் நிலையத்தில் நாககணேஷ் தனது மனைவி ஐஸ்வர்யா மற்றும் அவருடன் வந்த 3 பேர் தனது குழந்தையை கடத்த முயன்றதாக புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் துடியலூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்