Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சீனா விவகாரத்தில் உங்களுக்கு உண்மை தெரியும்: ஆர்.எஸ்.எஸ். மோகன் பகவத் மீது ராகுல் பாய்ச்சல் 

அக்டோபர் 26, 2020 08:08

புதுடெல்லி: சீனாவின் ஊடுருவல் முயற்சிகள் தொடர்பான உண்மை நிலவரம் என்ன? என்பது ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்துக்கு தெரியும்,''  என மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் விஜயதசமி விழா நடைபெற்றது. இதில் பங்கேற்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசியதாவது:

சீனா எல்லைகளை ஆக்கிரமிக்க முயன்றபோது நமது படைகளும், அரசும், மக்களும் கொடுத்த பதிலடியில் திகைத்து போனது சீனா. சீனா இனி எப்போது எப்படி பதில் தரும்? என யாருக்கும் தெரியாது. ஆகையால், முன்னரங்க நிலைகளில் ராணுவம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ராணுவம் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும். இவ்வாறு மோகன் பகவத் பேசினார்.

இதற்கு தமது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ள ராகுல் காந்தி, சீனா விவகாரத்தில் ஆழமாக என்ன நடந்தது? என்பது மோகன் பகவத்துக்கு தெரியும். உண்மையில் நமது நிலத்தை சீனா ஆக்கிரமித்திருக்கிறது. இதனை ஆர்.எஸ்.எஸ்-ம் மத்திய அரசும் அனுமதித்திருக்கிறது என சாடியுள்ளார். சீனாவின் ஊடுருவல் குறித்து ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்துக்கு தெரியும் என்று ராகுல்காந்தி தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்புச்செய்திகள்