Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருடு போன 4 டூவீலர்கள் மீட்பு: வாலிபர் கைதாகி சிறையிலடைப்பு

அக்டோபர் 27, 2020 07:15

கம்பம்: தேனி மாவட்டம் கம்பத்தில் திருடு போன 4 மோட்டார் சைக்கிள்களை கம்பம் வடக்கு போலீசார் அதிரடியாக மீட்டனர். இதுதொடர்பாக வாலிபரை கைது செய்த போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தேனி மாவட்டம் கம்பத்தில் 4 இடங்களில் மோட்டார் சைக்கிள் திருடு போனது சம்பந்தமாக கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் மோட்டார் சைக்கிளின் உரிமையாளர்கள் தனித்தனியாக புகார் கொடுத்திருந்தனர். புகாரின் பேரில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சாய் சரண் தேஜஸ்வி, கம்பம் வடக்கு இன்ஸ்பெக்டர் சிலைமணி, சப்-இன்ஸ்பெக்டர் திவான்மைதீன் தலைமையில் தனிப்படை அமைத்து திருடனை பிடிக்க உத்தரவிட்டார்.

அதன்பேரில், போலீசார் மோட்டார் சைக்கிள் திருடனை தேடி வந்த நிலையில் கம்பம் மணிக்கட்டு ஆலமரம் பகுதியில் சந்தேகப்படும் படியாக மோட்டார் சைக்கிளில் சுற்றித் திரிந்த வாலிபரை பிடித்த போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில் கம்பம் சுவாமி விவேகானந்தர் தெருவைச் சேர்ந்த மொக்கை பாண்டியன் மகன் அஜித் குமார் (வயது 22) என்பதும் கம்பத்தில் பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது. 

இதையடுத்து அவனிடமிருந்து கம்பம் பகுதியில் திருடப்பட்ட 4 மோட்டார் சைக்கிள்களை போலீசார் கைப்பற்றினர். பின்னர் இதுகுறித்து கம்பம் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து    அஜித்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தலைப்புச்செய்திகள்