Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தொல்.திருமாவளவன் மீது பொய் புகார்: தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் புதுச்சேரி முதல்வர் வலியுறுத்தல்

அக்டோபர் 27, 2020 07:19

புதுச்சேரி: அரசியக் கட்சி தலைவர்கள் மீது களங்கம் விளைவிக்கும் பா.ஜ.க.வை வன்மையாக கண்டிப்பதாகவும் தொல்.திருமாவளவன் மீது பொய் புகார் கொடுத்தவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,''  என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து முதல்வர் நாராயணசாமி தெரிவித்ததாவது:

15 லட்சம் மக்கள் தொகை கொண்ட புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை  3 லட்சம் பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கொரோனா தாக்கம் குறைகிறது என மக்கள் கவனக்குறைவாக இருக்கக்கூடாது. பண்டிகை காலங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

வி.சி.க. தலைவர் தொல்.திருமாவளவனின் முழு பேச்சையும் கேட்காமல் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது, மனு நூலை தடை செய்யப்பட வேண்டும் என்று தான் அவர் கூறி உள்ளார். அவர் மீது பழி போட வேண்டும் என்று தான் பா.ஜ.க புகார் கூறி உள்ளது. தமிழக அரசு அவரின் முழு பேச்சையும் கேட்டு விட்டு முடிவில் பொய் புகார் கொடுத்தவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியல் கட்சி தலைவர்கள் மீது கலங்கம் விளைவிக்கும் வேலையில் பா.ஜ.க. தொடர்ந்து ஈடுபடுகிறது.  இதை வன்மையாக கண்டிக்கிறேன்.

காவல் துறைக்கு நவம்பர் 4ம் தேதி முதல் காவலர் தேர்வு நடத்தப்படும். காவல் துறையில் காலியாக உள்ள ஆய்வாளர் பதவிகள் மற்றும் மின் துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் காலியாக உள்ள இடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்