Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகம் முழுவதும் கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு: இந்து முன்னணி மாநில தலைவர் குற்றச்சாட்டு

அக்டோபர் 27, 2020 07:21

திருப்பூர்: தமிழகம் முழுவதும் கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கட்சிகள் ஒரே நிலைப்பாட்டில் இருக்கின்றன என்று திருப்பூரில் திருடர் கூட்டம் என்ற தலைப்பில் குறும் படத்தை வெளியிட்ட இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் குற்றம்சாட்டினார். திருப்பூர் தாராபுரம் சாலையில் உள்ள பா.ஜ.க. சேவை மையத்தில் இந்து முன்னணி சார்பில் குறும்படம் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் திருடர் கூட்டம் என்ற தலைப்பில் உருவாக்கப்பட்டுள்ள குறும் படத்தை வெளியிட்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்ததாவது: தமிழகத்தில் ஏராளமான கோயில்களின் சொத்துக்கள்  ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது. இதற்கு ஆண்டகட்சியும் ஆளும் கட்சிகளுமே காரணம். திருப்பூர் ஆண்டிபாளையம் பகுதியில் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் காவலர் குடியிருப்பு கட்டுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரக் கூடிய சூழ்நிலையில் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி அங்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது கண்டனத்துக்கு உரியது.

இதை கண்டித்து நவம்பர் 2-ம் தேதி சாலை மறியல் போராட்டம் நடைபெறும். இதுபோல தமிழகம் முழுவதுமே கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. இதற்கு தி.மு.க. அ.தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் துணை போயுள்ளன.

இவ்வாறு இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்தார். இதன்பின் மாற்றுக் கட்சியை சேர்ந்த ஏராளமானோர் இந்து முன்னணியில் இணையும் விழாவும் நடைபெற்றது.

தலைப்புச்செய்திகள்