Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சோத்துப்பாறை அணையில் நீர் திறப்பு: துணை முதல்வர் ஓ.பி.எஸ். பங்கேற்பு

அக்டோபர் 27, 2020 07:23

பெரியகுளம்: சோத்துப்பாறை அணையில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பெரியகுளம் பகுதியில் உள்ள 2,865 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதற்காக நீரை திறந்து வைத்தார். பெரியகுளம் கண்மாயை முழுமையாக தூர்வாரி அதிக நீரை தேக்கி வைக்க வேண்டும் என தென்கரை விவசாய சங்கத்தினர் துணை முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் உள்ள சோத்துப்பாறை அணையில் இருந்து 2,865 ஏக்கர் முதல் போக சாகுபடிக்காக 30 கன அடி நீர் திறக்கப்பட்டது. இந்த நீர் திறப்பால் பெரியகுளம், மேல்மங்களம், லெட்சுமிபுரம், தாமரைக்குளம்,  பகுதியில் உள்ள நன்செய் நிலங்களான 1,825 ஏக்கரும் புதிய புன்செய் பாசனமான 1,040 ஏக்கரி நிலங்கள் பயன்படும் வகையிலும் நீர் திறக்கப்பட்டது.

நேற்று முதல் 52 நாட்களுக்கு வினாடிக்கு 30 கன அடியும், அடுத்த 27 நாட்களுக்கு 27 கன அடி நீரும், கடைசி 50 நாட்களுக்கு 25 கன அடி நீர் வீதம் முறை பாசனத்தின்படி நீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்தானர். பாசனத்திற்கான நீரை தமிழக துணை முதலவர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ்,  கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகார்கள் உடன் இருந்தனர்.

அணையின் நீர் மட்டம் 126.28 அடியில் தற்பொழுது 121.68 அடியாகவும் 92.42 மில்லியன் கன அடி நீர் உள்ளது. நீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசூல் அடைய விவசாயிகளுக்கு மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. இதனை தொடர்ந்து பெரியகுளம் விவசாய சங்கத்தினரிடம் துணை முதலவர் குறைகளை கேட்ட போது பெரியகுளம் கண்மாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி 3 அடி வரை தூர்வாரி அதிக நீரை தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெரியகுளம் தெனகரை விவசாய சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் பெரியகுளம் பகுதியில் உள்ள குளங்களுக்கு முறையாக நீர் வரத்து வாய்கால்களை தூர் வாரி நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாய சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தலைப்புச்செய்திகள்