Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இளம் வழக்கறிஞருக்கு மாதம் ரூ.3,000 வழங்கல்: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

அக்டோபர் 30, 2020 08:55

சென்னை: சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் நடந்த விழாவில் இளம் வழக்கறிஞர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.3,000 வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். தமிழகத்தில் பல்வேறு சட்டக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் படித்து விட்டு ஆண்டுதோறும் ஏராளமான இளம் வழக்கறிஞர்கள் வெளியே வருகின்றனர். இவர்கள் தேசிய அளவிலான வழக்கறிஞர்கள் குழுமத் தேர்வு எழுதி, தேர்ச்சி பெற்றால் தான் பார் கவுன்சிலில் நிரந்தரப் பதிவுச் சான்றிதழ் பெற முடியும். இதனைத் தொடர்ந்து இளநிலை வழக்கறிஞர்களாக யாராவது ஒரு மூத்த வழக்கறிஞரிடம் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் பயிற்சி பெற வேண்டும்.

அந்த வகையில் இளம் வழக்கறிஞர்கள் தங்கள் பணியை தொடங்குவதற்கு நான்கு ஆண்டுகள் வரை ஆகிறது. அதுவும் ஏழ்மை நிலையிலுள்ள குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களின் நிலை சற்று சிரமமானது. ஏனெனில் மிகவும் வறுமையான நிலையில் தங்களை வழக்கறிஞர்களாக நிலைநிறுத்திக் கொள்ள முடியாமல் உள்ளனர். இவர்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசு பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறது.

அந்த வகையில் இளம் வழக்கறிஞர்களுக்கு இரண்டு ஆண்டு காலத்திற்கு மாதம் 3,000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். இதுதொடர்பான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. அப்போது அரசு சட்டக் கல்லூரிகளில் படித்த 30 வயதுக்குள் இருக்கும் வழக்கறிஞர்களுக்கு மட்டும் நிதியுதவி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த உத்தரவால் தமிழகத்தில் உள்ள இளம் வழக்கறிஞர்கள் ஆயிரக்கானோர் பயன்பபெறுவர் என்பது குறிப்படத்தக்கது.

தலைப்புச்செய்திகள்