Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சட்ட சிக்கலின்றி அரசாணையை அமல்படுத்த வேண்டும்: ஸ்டாலின் 

அக்டோபர் 30, 2020 11:51

ராமநாதபுரம்: மருத்துவ படிப்படில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு விவகாரத்தில் சட்ட சிக்கல் ஏற்படாமல் அரசாணையை அரசு அமல்படுத்த வேண்டும்,''  என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அவரது பிறந்த நாளான நேற்று தேவர் ஜெயந்தி குரு பூஜையாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மதுரை கோரிப்பாளைத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது: மருத்துவ படிப்பில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு விவகாரத்தில் சட்ட சிக்கல் ஏற்படாமல் அரசாணையை அரசு அமல்படுத்த வேண்டும். அரசாணையை முன்கூட்டியே பிறப்பிக்காதது தமிழக அரசின் நிர்வாகம் மோசமடைந்துள்ளதை காட்டுகிறது. இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் இடஒதுக்கீடு மசோதாவிற்கு ஆளுநர் நேற்று ஒப்புதல் அளித்தார். ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில் அவருக்கு நன்றி தெரிவித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மு.கஸ்டாலின் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

“45 நாட்கள் கழித்து, மருத்துவ கலந்தாய்வுக்கான காலம் நெருங்குகையில், வேறு வழியின்றி 7.5 சதவீதம் இடஒதுக்கீடுக்கு ஒப்புதல் வழங்கிய ஆளுநருக்கு நன்றி. தி.மு.க.வின் போராட்டமும் நீதியரசர்கள் வைத்த மனச்சாட்சி வேண்டுகோள்களும் ஆளுநரின் மனமாற்றத்துக்கு காரணம். இறுதியில் வென்ற சமூகநீதி, எப்போதும் வெல்லும்,” என்று பதிவிட்டுள்ளார். 

தலைப்புச்செய்திகள்