Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கோயம்பேடு மொத்த பழ வியாபார கடைகள் 6 மாதங்களுக்குப் பின்னர் திறப்பால் மகிழ்ச்சி

நவம்பர் 02, 2020 06:48

சென்னை: கொரோனா வந்தததால்  6 மாதங்களுக்குப் பின்னர் சென்னை கோயம்பேடு மொத்த பழவியாபார கடை திறக்கப்பட்டுள்ளதால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். சென்னையில் கொரோனா பரவலில் கோயம்பேடு காய்கறி சந்தை முக்கிய காரணியாக இருந்ததால் 6 மாதங்களுக்கு முன்னர் மூடப்பட்டது. பின்னர் காய்கறி சந்தை மட்டும் அண்மையில் திறக்கப்பட்டது.

ஆனால், மொத்த பழவியாபார கடைகள் திறக்கப்படாமல் இருந்தன. இது தொடர்பாக மொத்த பழ வியாபாரிகள் கடை உரிமையாளர்கள் அரசுக்கும் கோரிக்கை வைத்தனர். இதனடிப்படையில் 6 மாதங்களுக்குப் பின் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் சென்னை கோயம்பேடு மொத்த பழவியாபார கடைகள் திறக்கப்பட்டன. இதையடுத்து சரக்கு வாகனங்களில் இருந்து பழங்கள் கொண்டுவரப்பட்டன. கோயம்பேடு சந்தையில் சரக்கு வாகனங்கள் இரவு 7 மணி முதல் அதிகாலை 5 மணிவரை மட்டுமே அனுமதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் கோயம்பேடு மொத்த பழவியாபார கடை திறக்கப்பட்டுள்ளதால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியில் இருந்தாலும் சென்னையில் பழங்கள் விற்பனை அதிகரிக்கும் என்றும், விலை குறைய வாய்ப்பிருப்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்