Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

4,000 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல் போடி அருகே 3 பேர் அதிரடி கைது

நவம்பர் 02, 2020 08:33

போடி: போடி அருகே, சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 4,000 கிலோ வெடிபொருட்களை பறிமுதல் செய்ததுடன் அதை பதுக்கி வைத்திருந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தேனி மாவட்டம், போடி துரைராஜபுரம் காலனியை அடுத்த தங்கபாலம் அருகே தென்னந்தோப்பு உள்ளது. இந்த தோப்பில் உள்ள பண்ணை வீட்டில் சட்டவிரோதமாக வெடிபொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து போடி டி.எஸ்.பி. பார்த்திபன் தலைமையிலான தனிப்படையினர் அங்கு திடீர் சோதனை செய்தனர்.

அப்போது அங்கு 3 ஆயிரம் கிலோ வெடி மருந்து பொருட்கள், ஆயிரம் கிலோ எலக்ட்ரிக் தாயத்துக்கள் ஆகியவை பதுக்கி வைத்க்கப்பட்டிருந்தது தெரிந்தது. விசாரணையில் இப்பகுதியில் கல்குவாரி நடத்தி வரும் முருகன் மகன் முருகப்பா (53) என்பவரது பண்ணை வீட்டில் இவருடன் சேர்ந்து, இவரது மேலாளர் குமரேசன் (43), வெடிபொருட்களை வெடிக்க வைப்பவரான பெருமாள் (40) ஆகியோர் பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது.

இதுகுறித்து குரங்கணி காவல் நிலைய ஆய்வாளர் ஷாஜகான் வழக்கு பதிவு செய்து குமரேசன், பெருமாள், முருகப்பா ஆகியோரை கைது செய்து, 4 ஆயிரம் கிலோ வெடி பொருட்களை பறிமுதல் செய்தும் விசாரித்து வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்