Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மேலப்பாளையத்தில் செல்போன் கோபுரம்: கடும் எதிர்ப்பு பொதுமக்கள் சாலைமறியல்

நவம்பர் 05, 2020 05:45

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையத்தில், செல்போன் கோபுரம் அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு பொது மக்கள் சாலைமறியல் செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட மேலப்பாளையம் மண்டலத்தில் உள்ள விரிவாக்க பகுதிகளான, அமுதா நகர், அமுதா பீட் நகர் மற்றும் ஆசிரியர்கள் காலனி ஆகியவற்றை உள்ளடக்கியுள்ள பகுதியில், தனியார் நிலம் ஒன்றில், செல்போன் கோபுரம் அமைக்கும் பணிகள், இரவு- பகலாக நடைபெற்று வருகின்றன.

இது பற்றிய விவரம் அறிந்ததும், செல்போன் கோபுரம் அமைப்பதால், அதில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சுக்களால், தங்களுக்கு மிகுந்த பாதிப்பு ஏற்படக்கூடும் என்று கூறி,  அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு வந்து, செல்போன் கோபுரம் அமைக்கும் இடத்தின் அருகில் நின்று கொண்டு,  தங்களுடைய கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர். அத்துடன்,  சாலை மறியல் செய்யவும் முயன்றனர். தகவல் தெரிந்ததும், மேலப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலெட்சுமி மற்றும் போலீசார்,  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, குடியிருப்பு வாசிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனை தொடர்ந்து, சாலை மறியல் திட்டம் கைவிடப்பட்டது.

"செல்போன் கோபுரம் அமைக்கும் பணிகளை உடனடியாக கைவிட வேண்டும்!" என்று அவர்கள், மீண்டும்- மீண்டும் வலியுறுத்தினர். இதுபற்றி, உரிய அலுவலர்களுக்கு தகவல் தெரிவிப்பதாக, போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலெட்சுமி உறுதி அளித்ததின் பேரில், அனைவரும் கலைந்து சென்றனர்.

தலைப்புச்செய்திகள்