Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பட்டாசு கடை வைக்க ரூ.15,000 லஞ்சம் வாங்கிய ஆர்.டி.ஓ. அலுவலக ஊழியர்கள் இருவர் கைது

நவம்பர் 05, 2020 05:58

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே தீபாவளிக்கு பட்டாசு கடை வைக்க ரூபாய் 15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஆர்.டி.ஓ. அலுவலக ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியை சேர்ந்தவர் தனசேகரன். இவர் தீபாவளிக்கு பட்டாசு கடை வைப்பது வழக்கம். கடந்த ஒரு மாதமாக பட்டாசு கடை வைப்பதற்காக தீயணைப்புத்துறை, ஆர்.டி.ஓ. அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தாலுகா அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு சென்று லைசன்ஸ் கேட்டு மனு அளித்தும் அனுமதி கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தார்.

இந்நிலையில் ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பணியாற்றிவரும் டபேதார் அப்துல் காதர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் ஓட்டுநர் சிங்காரம்  ஆகியோர்கள் ரூபாய் 15,000 கொடுத்தால் உடனடியாக பட்டாசு கடை வைக்க லைசன்ஸ் பெற்று தருவதாக தெரிவித்தனர். இதில் மன உளைச்சல் அடைந்த தனசேகர் லஞ்சப் பணம் கொடுக்க விருப்பமில்லாமல் ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் லஞ்சம் ஒழிப்பு டி.எஸ்.பி. உன்னி கிருஷ்ணன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறையினர் ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்த முடிவு செய்தனர்.

தனசேகரிடம் ரசான பொடி தடவிய பணத்தை கொடுத்து அனுப்பி வைத்தனர். ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்சஒழிப்பு போலீஸார் மறைந்திருந்து கண்காணித்து வந்தனர். அப்போது லஞ்சப் பணத்தை தனசேகர் கொடுத்த போது அப்துல்காதர், சிங்காரம் இருவரையும்  கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 

தலைப்புச்செய்திகள்