Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அம்பாசமுத்திரத்தில் ஒருங்கிணைந்த புதிய நீதிமன்ற கட்டிடம்: காணொளி காட்சி மூலம், ஐகோர்ட் தலைமை நீதிபதி திறப்பு

நவம்பர் 06, 2020 07:33

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில்  7 கோடியே 23 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட  ஒருங்கிணைந்த புதிய நீதிமன்ற கட்டிடத்தை சென்னையில் இருந்தபடியே, காணொளி காட்சி மூலம், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திறந்து வைத்தார். திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், அம்பாசமுத்திரம் பிரதான சாலையில், சுமார் 100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த, கட்டிடங்களில் நீதிமன்றங்கள் இயங்கி வந்தன. இந்த கட்டிடங்கள் அனைத்தையும், தரைமட்டமாக்கி விட்டு, அதே இடத்தில் மொத்தம் 7 கோடியே 23 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இதன் திறப்பு விழா நடைபெற்றது.

சென்னையில் இருந்தபடியே, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அம்பரேஷ்வர் பிரதாப் சாஹி, உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், அனிதா சுமந்த்,  கிருஷ்ணவள்ளி ஆகியோர் முன்னிலையில்,  காணொளி காட்சி மூலம், புதிய கட்டிடத்தை  திறந்து வைத்தார். அதே நேரத்தில்,  அம்பாசமுத்திரத்தில் நடைபெற்ற விழாவில், மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், மாவட்ட போலீஸ் எஸ்.பி. மணிவண்ணன், சார்பு நீதிபதிகள் அம்பாசமுத்திரம் கவிதா, வள்ளியூர் மாய கிருஷ்ணன், மாவட்ட சட்டப்பணிகள் குழு நீதிபதி வர்ஷித் குமார், மாவட்ட உரிமையியல் நீதிபதி செந்தில் குமார், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி இளையராஜா, குற்றவியல் நீதித்துறை நடுவர் கார்த்திகேயன் உட்பட, திரளானோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக திருநெல்வேலி மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி நசீர் அகமது அனைவரையும் வரவேற்று பேசினார். பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் புவனேசுவரன் திட்ட அறிக்கை வாசித்தார்.

தலைப்புச்செய்திகள்