Saturday, 29th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருச்செந்தூரரில் கந்தசஷ்டி விழா: அமைச்சர் தலைமையில் ஆலோசனை

நவம்பர் 06, 2020 07:39

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்தசஷ்டி விழா குறித்து தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுமாமி திருக்கோவில் கந்தசஷ்டி விழா ஆண்டுதோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்படும் இந்த ஆண்டு கந்தசஷ்டி திருவிழா வரும் 15ம் தேதி தொடங்கி 21ம் தேதி வரையில் நடைபெற உள்ளது. 

கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக கந்தசஷ்டி விழா பாதுகாப்பாக கொண்டாடுவது குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில், தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், கோவில் இணை ஆணையர் கல்யாணி மற்றும் காவல்துறை, தீயணைப்புத்துறை, வருவாய் துறை, அரங்காவலர் துறை உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு தங்களின் கருத்துக்களை தெரிவித்தனர். 

இந்த ஆய்வுக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவை தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டு அதன் பிறகு அறிவிக்கப்படும். இவ்வாறு தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்