Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கள்ளக்குறிச்சியில் லஞ்ச வி.ஏ.ஓ.வை கண்டித்து பிச்சை எடுக்கும் போராட்டம்

நவம்பர் 06, 2020 07:41

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே லஞ்சம் வாங்கும் கிராம நிர்வாக அலுவலரை கண்டித்து கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் அலுவலகம் முன் பிச்சை எடுத்து லஞ்சம் கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகேயுள்ள எடுத்தவாய்நத்தம் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலர் பொதுமக்களிடம் முதியோர், விதவை உதவித்தொகை பெற்றுத்தர வாங்கிய லஞ்சப்பணத்தை திரும்ப வழங்க வேண்டும். வீட்டுமனைபட்டா வழங்குவதாக கூறி லஞ்சப்பணத்தை திரும்ப வழங்க வேண்டும். அவரை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

மக்கள் உரிமை, லஞ்ச ஒழிப்பு மற்றும்  நுகர்வோர் பேரவையின் மாநிலத்தலைவர் ராமநாத அடிகளார் தலைமையில் எடுத்தவாய்நத்தம் கிராமத்தை சேர்ந்த கிராம மக்கள் கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் அலுவலகம் முன் பிச்சை எடுத்து லஞ்சம் கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். எடுத்தவாய்நத்தம் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலரை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்கள் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

தலைப்புச்செய்திகள்