Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இதுவே என் கடைசி தேர்தல்: பிரச்சாரத்தில் நிதிஷ் குமார் பரபரப்பு! 

நவம்பர் 07, 2020 05:17

பாட்னா: பீஹாரில் தற்போது நடைபெற்று வரும் சட்டமன்ற தேர்தலே என்னுடைய கடைசி தேர்தல்,''  என்று நிதிஷ் குமார் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீஹார் மாநிலத்தில் மூன்று கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு கட்டத் தேர்தல்களில் முறையே 55.69 சதவீதம் மற்றும் 55.70 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. இந்த சூழலில், மூன்றாம் கட்ட தேர்தல் நாளை நடைபெறுகிறது. இதற்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் நிறைவு பெற்றது. வாக்குப்பதிவு முடிவடைந்ததும் வரும் 9ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்நிலையில், மூன்றாம் கட்டத் தேர்தலை ஒட்டி, புர்னியா பகுதியில் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளக் கட்சி தலைவருமான நிதிஷ் குமார் கடைசி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது நிதிஷ்குமார் பேசுகையில், இதுவே என்னுடைய கடைசி தேர்தல். எனவே, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மக்கள் அதிகப்படியான வாக்குகளை அளித்து மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர வழி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்

இதுதொடர்பாக லோக் ஜன்சக்தி கட்சி தலைவர் அஜய் குமார் கூறுகையில், நிதிஷ் குமாரின் காலம் முடிந்துவிட்டது. நடப்பு தேர்தலிலேயே ஐக்கிய ஜனதா தளக் கட்சி சார்பில் புதிதாக ஒரு முதல்வர் வேட்பாளரை அறிவித்திருக்க வேண்டும் என்று தெரிவித்தார். ராஷ்டிரிய லோக் சம்தா கட்சி தலைவர் உபேந்திரா குஷ்வாஹா கூறுகையில், இதுவே தனது கடைசி தேர்தல் என்று அறிவித்ததற்கு நிதிஷ் குமாருக்கு நன்றி. என்னை ஆசிர்வதிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன். அரசியலில் இருந்து ஓய்வு பெறுவது நிதிஷ் குமாருக்கு மிகவும் நல்லது என்று குறிப்பிட்டுள்ளார்.

தலைப்புச்செய்திகள்