Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தெலுங்கானாவில் அமேசான் ரூ.20,761 கோடி முதலீடு

நவம்பர் 07, 2020 05:18

ஹைதராபாத்: உலகின் மிகப்பெரிய கிளவுட் கம்ப்யூட்டிங் நிறுவனங்களில் ஒன்றான அமேசான் வெப் சர்வீசஸ் நிறுவனம், தெலுங்கானாவில் 20,761 கோடி ரூபாய் மதிப்பில் தரவு மையத்தினை அமைக்க திட்டமிட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. தெலுங்கானா வரலாற்றிலேயே இப்படி ஒரு மிகப்பெரிய அன்னிய நேரடி முதலீட்டினை, பெறுவதில் மகிழ்ச்சி என்றும் அம்மாநிலம் அறிவித்துள்ளது. தெலுங்கானாவில் தரவு மையங்களை அமைக்க, அமேசான் வெப் சர்வீசஸ் 207.61 பில்லியன் ரூபாய் முதலீட்டினை இறுதி செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்த திட்டம் 2022ன் ஆண்டின் நடுத்தர காலத்தில் செயல்பாட்டுக்கு வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த முதலீட்டின் மூலம் தெலுங்கானாவில் அமேசான் மூன்று டேட்டா சென்டர்களை தொடங்கலாம் என்று ஹிந்துஸ்தான் செய்திகள் கூறுகின்றது. ஒன்று பவர், மற்றொன்று குளிரூட்டல், பிசிகல் செக்யூரிட்டி, நெட்வொர்க் வழியாக செயல்படக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அமேசான் இந்த அதிரடி திட்டத்தினால், எதிர்காலத்தில் இன்னும் பல நிறுவனங்கள் தெலுங்கானாவில் தங்களது தரவு மையங்களை அமைக்க விருப்பமான இடமாக மாறலாம். அமேசான் இந்த டேட்டா சென்டர், டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையை பல மடங்கு ஆதரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது என்று கே.டி.ஆர். தனது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வெளியிட்டுள்ளது.

அமேசானின் இந்த இந்த டேட்டா மையம், இன்னும் அதிகமான டெவலப்பர்கள், ஸ்டார்டப் நிறுவனங்கள், எண்டர்பிரைசஸ், அரசு, கல்வி, லாபம் நோக்கற்ற நிறுவனங்கள் தங்களது விண்ணப்பங்களை இயக்குவதற்கும், பயனர்களுக்கும் இது உதவும் வகையில் அமைய உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அதோடு ஒரு பிராந்தியத்தில் டேட்டா மையங்களை நிறுவுவது, ஈ-காமர்ஸ் துறை, பொதுத்துறை. வங்கித் துறை, நிதித்துறை, இன்சூரன்ஸ், வங்கி அல்லாத துறை, ஐ.டி. உள்ளிட்ட பல துறைகளின் செயல்பாட்டினை இது அதிகரிகும்.

எனினும், தற்போது ஐ.டி. துறையில் ஹைதராபாத் மிக உயர்ந்த வளர்ச்சியினை பதிவு செய்துள்ளது என்றும், பல புதுமையான ஸ்டார்டப் நிறுவனங்கள், மற்றும் திறமையான தொழிலாளர்கள் என பலரும் உள்ளனர் என்று கே.டி.ஆர். தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. அமேசான் தெலுங்கானவை தேர்தெடுத்ததற்கு காரணம் வலுவான கட்டமைப்பு, அரசின் ஆதரவு உள்ளிட்ட பல காரணங்கள் உண்டு என்று கூறப்படுகிறது. தெலுங்கானா அரசு தொடங்கப்பட்டதில் இருந்து (ஜூன் 2014ல் இருந்து) அரசு ஈர்த்துள்ள மிகப்பெரிய முதலீடுகளில் இதுவும் ஒன்றாகும். இந்த மிகப்பெரிய முதலீடு உண்மையில் மற்ற துறையிலும் அன்னிய முதலீடுகளை ஈர்க்க நங்கூரமாக அமையும். ஹைதராபாத்தில் மிகப்பெரிய அலுவலகத்தினை கொண்ட அமேசான், தற்போது அதன் உறவினை தெலுங்கானாவுடன் மேலும் வலுப்படுத்துகிறது. 
 

தலைப்புச்செய்திகள்