Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு சட்டம்: அரசிதழில் வெளியீடு 

நவம்பர் 07, 2020 11:14

சென்னை: தமிழகத்தில் மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. 7.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு சட்டமாக நிறைவேற்றப்பட்டதை அடுத்து தமிழக அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்காக மசோதா ராஜ்பவனுக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில், இந்த மசோதாவுக்கு 
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கடந்த வாரம் ஒப்புதல் அளித்திருந்தார். இதனால் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு மசோதா சட்டமானது. மருத்துவ படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் 18ம் தேதிக்கு மேல் கலந்தாய்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனிடையே, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்தது. இதற்கு பதில் அளித்து நீலகிரி பேசிய முதல்வர் பழனிசாமி, மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு தர சட்டம் இயற்றப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இந்த நிலையில், மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. 7.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு சட்டமாக நிறைவேற்றப்பட்டதை அடுத்து தமிழக அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்