Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நெல்லை மாநகர் மாவட்ட அ.ம.மு.க. ஆலோசனை கூட்டம்

நவம்பர் 09, 2020 04:59

திருநெல்வேலி: அ.ம.மு.க. பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆணைக்கிணங்க, தேர்தல் பிரிவு செயலாளர், கடம்பூர் மாணிக்கராஜா வழிகாட்டுதலின்படி, நெல்லை மாநகர் மாவட்டம் சார்பில், உறுப்பினர் சேர்க்கை, புதிய  நிர்வாகிகள் நியமனம், கட்சி வளர்ச்சி பணி குறித்து, பகுதி, ஒன்றியம், நகர, பேரூர், வட்ட, கழக செயலாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் பரமசிவ ஐயப்பன் தலைமையில், அமைப்புச் செயலாளர் பால்கண்ணன், அம்மா பேரவை தொழிற்சங்க பொருளாளர் நெல்லை பரமசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்வில் மாவட்ட அவைத்தலைவர் தாழை மீரான், மாவட்ட  பொருளாளர் ஜோதிராஜ்,  மாவட்ட இணைச்செயலாளர் ஜோதி சுபாஷ், மாவட்டத் துணைச் செயலாள அரைஸ்,  பகுதி செயலாளர்கள் பாளை ரமேஷ், மேலப்பாளையம் ஹைதர்அலி, தச்சை பேச்சிமுத்துபாண்டியன், நெல்லை ஐயப்பன் பங்கேற்றனர். ஒன்றிய செயலாளர்கள் ராஜா, வைகுண்டராஜன், ராஜசேகர், செல்லத்துரை,.பாலசுப்பிரமணியன், பாண்டியராஜ், பழனிமுருகன், பாலமுருகன், ராம் குமரன் மற்றும் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு மணிகண்டன், மாவட்ட இலக்கிய அணி மாரியப்பன், மாவட்ட மாணவரணி பொன்ராஜ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர், (பொ) சீனி குமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் மாரி,  மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் அப்பாதுரை, பிரின்ஸ் சாமுவேல், சங்கரன்கோவில் பரந்தாமன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் பரமசிவம், இசக்கிராஜா, சங்கரன்கோவில் நகர செயலாளர் முப்புடாதி மற்றும் பேரூர்  செயலாளர்கள் வட்ட செயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமான அ.ம.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்